அவன் கொஞ்சம் அடிச்சு ஆடட்டும், நீ குத்திப்போடு : ஆஸி.யில் தமிழில் கலக்கிய தினேஷ் கார்த்திக், அஸ்வின்

Ravichandran Ashwin Dinesh Karthik T20 World Cup 2022
By Irumporai Oct 17, 2022 10:08 AM GMT
Report

ஆஸ்திரேலிய அணியுடனான பயிற்சி போட்டியில் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிற்கு பின் நின்று பல மொழிகளில் பேசிய ஆடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

டி20 உலகக்கோப்பை 

டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் இந்தியா  ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதின,இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

[Y388UD

இந்திய அணியில் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது,இந்நிலையில் இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் செய்த விஷயங்கள் சுவாரஸ்யத்தை கொடுத்துள்ளது .

அஸ்வினின் தமிழ் பேச்சு

தமிழக வீரர் அஸ்வின் பந்துவீச வரும் போது, தினேஷ் கார்த்திக் தொடர்ச்சியாக தமிழில் ஐடியா கொடுக்க, அதற்கு அஸ்வினும் பதில் கொடுத்த ஆடியோக்கள் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.

அதில், அஸ்வினின் ஓவரில் பேசிய தினேஷ் " பந்து ரிலீஸ் பன்னும் போது கைய மாத்து, அவன் ஈசியா கண்டு புடிச்சி அடிக்கிறான், மாத்திப்போடு, எனக்கூற இதுக்கு பதில் கொடுத்த அஸ்வின்,  இதுமாறி மேட்ச்ல தான் ட்ரை பண்ணி பார்க்க முடியும், பார்ப்போம் எனக்கூறினார்.

தொடர்ந்து பேசிய தினேஷ், அவன் கொஞ்சம் அடிச்சு ஆடட்டும், நீ குத்திப்போடு, வேகமா போடு என தொடர்ச்சியாக தமிழில் அவர் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகிவருகிறது