கேப்டன் பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன் - பிரபல இந்திய அணி வீரர் பரபரப்பு பேச்சு

Dinesh Karthik Kolkata knight riders
By Petchi Avudaiappan Jun 06, 2021 10:08 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவி குறித்த தெரிவித்த கருத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா காரணமாக கொல்கத்தா அணியில் பாட் கம்மின்ஸ் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனவும், கேப்டன் இயான் மோர்கன் பங்கேற்பதும் இன்னும் உறுதியாகவில்லை என்றும் அந்த அணி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இந்த சூழலில் எனக்கு கேப்டன் பதவி தேடி வந்தால், நிச்சயம் ஏற்றுக்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய டி20 அணியின் மிடில் வரிசையில் வெற்றிடம் உள்ளது. அதையும் தன்னால் நிரப்ப முடியும் எனவும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.