சையத் முஷ்டாக் டி20 போட்டியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகல் - அடுத்த கேப்டன் யார்?
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. தமிழக அணி எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
லீக் ஆட்டங்கள் அனைத்தையும் லக்னெளவில் விளையாடுகிறது. சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமல்லாமல் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் விலகியுள்ளார்.
முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் இறுதிச்சுற்றிலேயே ஊசி செலுத்திக்கொண்ட பிறகு தான் விளையாடினார்.
எனவே சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக விஜய் சங்கர் தமிழக அணியின் கேப்டனாகச் செயல்படுவார் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராமசாமி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: வெடிக்கும் போராட்டங்கள் - ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சின் அதிரடி IBC Tamil
