உலகக் கோப்பை இல்லை… என்வேலை இது மட்டும் தான் : தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வாவது குறித்து எந்த ஒரு கவலையும் கிடையாது என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சர்வதேச இந்திய அணிக்கு அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
தோனியின் ஓய்விற்குப்பின் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் முக்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆனால் நிலையோ வேறானது.
ஒரங்கட்டப்பட்ட தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்க்கை தேர்ந்தெடுப்பதற்கு பதில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேர்ந்தெடுத்தால் எதிர்கால இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்பதால் தினேஷ் கார்த்திக் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் செய்தியாளர்கள் சந்திப்பில் உலகக் கோப்பை தொடர் சம்பந்தமான தனது கருத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், “எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய அணியை நாங்கள் தயார் செய்து வருகிறோம்.
எனது கவனம் உலக கோப்பை அல்ல
இந்தத் தொடரில் அனைத்து அணிகளும் தகுந்த முன்னேற்பாடுடன் நிச்சயம் விளையாடும், அதற்கு ஏற்றார் போல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மாவுடன் நாங்களும் தயாராக உள்ளோம்.
தற்போதைய சூழ்நிலை நமக்கு அதிக சாதகமாகவே உள்ளது. ஆனால் என்னுடைய கவனமெல்லாம் உலகக்கோப்பை தொடரில் தேர்வாக வேண்டும் என்பதை பற்றி அல்ல., நான் அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாட வேண்டும் என்பதுதான் எனக் கூறியுள்ளார்.