சி.எஸ்.கே வுக்கு வந்தா நல்லா இருக்கும் : தினேஷ் கார்த்திக் விருப்பம்
ஐ.பி.எல். 2022 சீசனுக்கான மெகா ஏலம் வரும் 12, 13-ம் தேதி நடைபெற உள்ளது. மூத்த வீரர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கள், இளம் வீரர்கள் என பலர் தங்கள் பெயரை பதிவுசெய்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது அந்த அணியிலிருந்து விலகியுள்ளநிலையில், தற்போது வர உள்ள ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து விளையாட விரும்புவதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக் நான் சென்னையை பூர்விகமாக கொண்டவன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும்.
அதே சமயம் எந்த அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என கூறியுள்ளார்.
.