தினேஷ் கார்த்திக்கிற்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் - இதற்காக தானே ஆசைப்பட்டார்...!
இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக்கின் நீண்ட நாள் ஆசை நிறைவேறவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் 15வது சீசன் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வரும் பெங்களூரு அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பெற்றுள்ளது.
இந்த அணியில் ஐபிஎல் ஏலம் மூலம் உள்நுழைந்த தினேஷ் கார்த்திக் அசத்தலான பார்மில் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சரிவர கிரிக்கெட்டே ஆடாமல் இருந்த தினேஷ் கார்த்திக் இம்முறை சிறப்பாக ஆடுவதால் டி20 உலகக்கோப்பையில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார். ஏற்கனவே டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியில் ஃபினிஷர் ரோல் செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை என அவர் கூறியிருந்தார்.
இதனிடையே டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக தென்னாப்பிரிக்க தொடர் நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதால் அவருக்கு இந்திய வாய்ப்பு அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என தேர்வாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.