டெஸ்ட் அணியில் எனக்கு எதிர்காலம் இல்லை - சோகத்தில் பிரபல இந்திய வீரர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கு எதிர்காலம் இல்லை என இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக ஒருகாலத்தில் ஜொலித்த தினேஷ் கார்த்திக் தற்போது அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் தற்போது வர்ணனையாளராகவும் மாறி விட்டார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இந்தியா - இங்கிலாந்து தொடர் என அவர் தொடர்ந்து பிசியாக வர்ணனை செய்து வருகிறார்.
இதனிடையே முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் தமிழ்நாட்டுக்காக தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் இப்போது விக்கெட் கீப்பராக இருக்கும் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும்.
மேலும் எனக்கு டெஸ்ட் போட்டிகளில் இனி எதிர்காலம் இல்லை என்பதால் விளையாடுவதில்லை எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.