அவர் பயங்கர Selfish - இந்தியா டீம்'க்கு வேண்டாவே வேண்டாம் - அகர்கர் ஆதங்கம்

Rohit Sharma Indian Cricket Team Dinesh Karthik T20 World Cup 2024
By Karthick Apr 24, 2024 11:18 AM GMT
Report

உலகக்கோப்பையை விளையாடப்போகும் இந்தியா அணி தேர்வு தான் தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

டி20 உலகக்கோப்பை

ஐபிஎல் தொடர் முடிந்த உடன் உலகக்கோப்பை டி20 தொடர் துவங்கவிருக்கிறது. இந்தியா அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா தான் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டு விட்டது.

dinesh-karthik-is-selfish-not-in-team-ajithagarkar

ஆனால், மற்ற வீரர்கள் யார் என்ற பெரும் குழப்பம் நீடிக்கிறது. அது விராட் கோலியையும் சேர்த்து தான். விராட் கோலியின் பேட்டிங் அமெரிக்கா நாடு மைதானங்களில் எடுபடாது என்றெல்லாம் கூறப்படுகிறது. ஆனால், அணி தேர்வு ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தான் நடைபெறும் என தகவல் வெளிவந்துள்ளது.

dinesh-karthik-is-selfish-not-in-team-ajithagarkar

இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்கள் ஐபிஎல் தொடரை பயன்படுத்தி கொண்டுள்ளார்கள். குறிப்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் என அனைவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து வருகிறார்கள்.

அம்பானி குடும்பத்தின் எச்சரிக்கை - அதிர்ந்த ஹர்திக்!! விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை

அம்பானி குடும்பத்தின் எச்சரிக்கை - அதிர்ந்த ஹர்திக்!! விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை

அதிலும், பெங்களூரு அணியில் விளையாடும் தினேஷ் கார்த்திக் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கின்றார். கடைசி 3 அல்லது 4 ஓவர்கள் விளையாடும் அவர் பெங்களூரு அணியின் ஸ்கோரை பெருமளவில் உயர்த்தி பிடிக்கிறார்.

dinesh-karthik-is-selfish-not-in-team-ajithagarkar

அவருக்கு இந்தியா அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தினேஷ் கார்த்திக் குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

dinesh-karthik-is-selfish-not-in-team-ajithagarkar

அண்மையில் நடைபெற்ற பிசிசிஐ மீட்டிங்கில் அஜித் அகர்கர் தினேஷ் கார்த்திக் குறித்து பெரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். அணியில் இடம்பெற்றாலே போதும் என அவர் நினைப்பதாக குறிப்பிட்டு, கடந்த 2022 தொடருக்கு முன்பும் அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் இடம்பிடித்து, பிறகு தேசிய அணியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என பேசியதாக தகவல் உள்ளது.