கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை குடும்பத்தினர் மகிழ்ச்சி
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிகல் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வருபவர் தினேஷ் கார்த்திக். தமிழகத்தைச் சேர்ந்த இவர், பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிகல்லை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.
இந்த மகிழ்ச்சியான தகவலை தன்னுடைய ட்விட்டர் பதிவின் மூலம் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதில் அவர், "எனக்கும் தீபிகாவுக்கும் இரண்டு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதன் மூலம் எங்கள் குடும்பத்தினரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இவர்களின் பெயர் கபீர் பல்லிகல் கார்த்திக் மற்றும் ஜியான் பல்லிகல் கார்த்திக்" என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

Puzzle IQ Test: படத்தில் மறைந்திருக்கும் 6 வார்த்தைகள்-12 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Manithan
