இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான பிரபல கிரிக்கெட் வீரர் - குவியும் வாழ்த்து

dineshkarthik dipikapallikal
By Petchi Avudaiappan Oct 28, 2021 06:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.

இந்திய அணி, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி, சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி, கிரிக்கெட் வர்ணனை என ஆல்ரவுண்டராக வலம் வரும் தினேஷ் கார்த்திக் - ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 

இந்த தம்பதியினருக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ள தினேஷ் கார்த்திக், “சில நாட்களிலேயே 3ஆக இருந்த (செல்ல நாய்க்குட்டி உட்பட) குடும்ப எண்ணிக்கை, 5ஆக மாறியுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 

இரட்டை ஆண் குழந்தைகளுக்கு கபிர் பல்லிக்கல் கார்த்திக், சியான் பல்லிக்கல் கார்த்திக் என பெயர் சூட்டியுள்ளனர். இதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.