பெண்கள் பற்றிய சர்ச்சை கருத்து : மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்

Petchi Avudaiappan
in விளையாட்டுReport this article
வீரர்களின் பேட்டுடன் பெண்களை இணைத்து பேசியது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போது தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக அறிமுகமானார். அவரது கன்னி பேச்சு பெரும் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து இங்கிலாந்து - இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது அவர் பேசிய கருத்து ஒன்று சர்ச்சையை கிளப்பியது. "பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் தங்கள் பேட்டை விரும்புவதில்லை. அடுத்தவரின் பேட்டைதான் அவர்களுக்குப் பிடிக்கும்… பேட் என்பது அடுத்தவரின் மனைவியைப் போல" எனக் தினேஷ் கார்த்திக் கூறினார்.
இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் வர்ணனையின்போது தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.