வத்தலகுண்டு, மல்லாங்கிணறு, காரியாப்பட்டி பேரூராட்சிகள் திமுக கைவசமானது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் 21 மாநகராட்சி , 489 பேரூராட்சி மற்றும் 138 நகராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
அந்த வகையில் வத்தலகுண்டு பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அதிமுகவிடம் இருந்து வத்தலகுண்டு பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது.
மேலும், மல்லாங்கிணறு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக வெற்றி, மற்றும் காரியாப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று கைப்பற்றியது.