அதிமுக கூட்டணிக்கு வர ரூ.100 கோடி கேட்கிறார்கள் - திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுகவின் கூட்டணிக்கு வருபவர்கள் 100 கோடி கேட்கின்றனர் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.
திண்டுக்கல் சீனிவாசன்
திருச்சி மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் இன்று(19.11.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'என்னையையும் தங்கமணியையும், அழைத்த எடப்படியார், நீங்கள் பேட்டி கொடுத்து கூட்டணியை கெடுத்து விடாதீர்கள்' என்றார்.
கூட்டணிக்கு 100 கோடி
"நாங்கள் எதற்கு கெடுக்க போகிறாம். கூட்டணி இருந்தால் நல்லது தானே" என கூறினோம். அதற்கு, 'நீங்கள் யாரையாவது திட்டி விட்டு வந்துவிடுவீர்கள். என்ன இப்படி சொல்லி விட்டார்கள் என அவர்கள் கோபித்து கொள்கிறார்கள். கூட்டணி குறித்து நான் பார்த்து கொள்கிறேன்' என கூறி விட்டார்.
கூட்டணிக்கு வருபவர்கள் சும்மாவா வருகிறார்கள். '20 சீட் கொடுங்க, ரூ. 50 கோடி கொடுங்க, ரூ. 100 கோடி கொடுங்க' என்று கேட்கின்றனர். ஸ்டாலினிடம் கேட்டால், கேட்ட உடனே கொடுத்து விடுவார். அங்கே செல்ல வேண்டியது தானே என கேட்டால், 'அங்கு போனால் ஜெயிக்க முடியாது. இப்போது அதிமுகவிற்கு தான் மார்க்கெட் உள்ளது' என அந்த கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்" என பேசினார்.