நர்சிங் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரயில் நிலையத்தில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தேனி
வடமாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்திலும் பெண்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில் நர்சிங் மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தேனியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (செப்.23) வழக்கம் போல் காலை தனது சொந்த ஊரிலிருந்து தேனிக்கு பேருந்தில் வந்துள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பின் தொடர்ந்து வருவதாகத் தனது தந்தைக்கு செல்போன் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.இதனால் பயந்து போன மாணவியின் தந்தை போன் செய்துள்ளார். ஆனால் மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
கொடூரம்
இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவியை காரில் கடத்திய மர்ம நபர்கள், தேனி பகுதியில் வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
அதன்பிறகு, மாணவியை அதே காரில் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே இறக்கி விட்டு அவர்கள் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் முருகேஸ்வரி, மாணவியை மீட்டு சிகிச்சைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்.
தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாணவியிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.