முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி - என்ன பிரச்சனை தெரியுமா?
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய அதிமுகவின் பொருளாளருமான திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் ஸ்ரீனிவாசன்
அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன். 75 வயதாகும் அவர், முந்தைய அதிமுக ஆட்சியில் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.கட்சி பிளவுபட்ட போது, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்ட அவர், தற்போது அதிமுகவின் பொருளாளராக பதவி வகித்து வருகின்றார்.

மருத்துவமனையில் அனுமதி
தற்போது அவர் அதிமுக சார்பில், கடந்த 2021-ஆம் ஆண்டு திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் தான் அவருக்கு தற்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அவரை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உடலில் கட்டி இருப்பதாகவும், அதனை அகற்றும் பொருட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan