விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்
தவெக மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவில் பாஜக கூட்டணியில் ஒரு கட்சி என விஜய் கிண்டலடித்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், எங்கள் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான், அதிமுக தலைமையில் தான் பாஜக கூட்டணியில் உள்ளது, நாங்கள் அ்டிமையாக இருக்க அவசியம் ஏதுமில்லை.
டெல்லிக்கு சென்று வந்த பின், அதிமுக பற்றி விமர்சனங்களை முன்வைக்கிறார் விஜய், பாஜக பற்றி விமர்சிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசுகையில், திமுகவை வீழ்த்தும் சக்தி எங்களிடம் தான் இருக்கிறது.
விஜய் தேர்தல் களத்தில் உள்ளாரா? இல்லையா? என்று மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். மக்கள் தீர்ப்புக்குப் பிறகு யார் களத்தில் உள்ளார்கள்? யார் காணாமல் போனார்கள்? என்று தெரியும்.
எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் விஜய் புகழ்வதற்கு காரணம், இவர்கள் இருவரையும் தவிர்த்து விட்டு அரசியல் களத்தில் யாரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது.
அவர்களின் தியாகத்தை தவிர்த்து விட்டு தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் அடையாளப்படுத்த முயற்சித்தால் அது தோல்வியில்தான் முடியும் என தெரிவித்துள்ளார்.