விஜய் மிகப்பெரிய ஊழல்வாதி: அதிமுக மூத்த தலைவர் கடும் தாக்கு
அதிமுக-வை தவெக தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், அதற்கு பதிலடியாக விஜய்யை சரமாரியமாக தாக்கி வருகின்றனர் அதிமுக-வினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன், ஊழலை பற்றி பேச தகுதியில்லாதவர் விஜய், அவர் தான் மிகப்பெரிய ஊழல் பேர்வழி, தனது படங்களுக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்து கோடிகளில் சம்பாதிக்கிறார் என குற்றம் சாட்டினார்.
மேலும் ஒன்றரை கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது வழக்கு இருப்பதாகவும், லாட்டரி அதிபர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்துகொண்டு ஊழலை பற்றி பேசுவது வேடிக்கையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது திமுக ஆட்சி குறித்து பேசுகையில், ஊழல்வாதிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்ப்பவர் முக ஸ்டாலின் என குறிப்பிட்டதுடன், தேர்தல் நெருங்குவதால் ஸ்டாலின் அரசு பல நாடகங்களை அரங்கேற்றுவதாக தெரிவித்தார்.
மகளிர்க்கு 1000 ரூபாய் கொடுத்துவிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்துவிட்டதாகவும், 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் எனவும் தெரிவித்தார்.
