‘‘பாவம் அவரே குழம்பிவிட்டார் ’’மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்

election tamilnadu aiadmk sreenivaasan
By Jon Mar 22, 2021 01:20 PM GMT
Report

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். அதே சமயம் சில கட்சிதலைவர்களின் பிரச்சாரங்கள் இணையத்தில் நகைச்சுவையாக பகிரப்படும்.

அந்த வகையில் ட்ரெண்டிங்கிற்கு பஞ்சமில்லாத அமைச்ச திண்டுக்கல் சீனிவாசன் செல்லும் இடம் எல்லாம் ஏதாவது சர்ச்சையாக பேசி ட்ரெண்ட் ஆகி விடுவார். அந்த வகையில் நேற்று, திண்டுக்கல் தொகுதி, ரவுண்ட் ரோடு புதூர், குள்ளனம் பட்டி உள்ளிட்ட இடங்களில் வாக்குச் சேகரித்துவந்தார்.

அப்போது, ஒய்.எம்.ஆர். பட்டி பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, பொதுமக்கள் மத்தியில், நமது துணை முதல்வர் ஓ.பழனிசாமி” என ஓ.பன்னீர்செல்வத்தை, ஓ.பழனிசாமியாக மாற்றி உச்சரித்தார். இதனால், அங்கிருந்த அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் குழம்பிப்போனர் ஆனால் இவ்வாறு பேசுவது புதியது அல்ல என கட்சியினர் மனதினை தேற்றிக் கொண்டனர் .