நீங்க என்னை மகளா நினைச்சுக்கோங்க பாட்டி... முதியவர்களை டார்கெட் பண்ணி திருடி வந்த ஜோடி கைது!

robbery dindigul Pluck jewelry Couple arrested
By Nandhini Jan 13, 2022 04:39 AM GMT
Report

முதியவர்களிடம் அன்பாகவும், பாசமாகவும் நைசாக பேசி மயக்க மருந்து கொடுத்து நகைகள் பறித்து வந்த கள்ளக்காதல் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வயதானவர்களை குறிவைத்து பல கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்துக் கொண்டிருக்கிறது.

அதோடு, பல திருட்டு சம்பவங்கள் ஒரே மாதிரியாக மயக்க மருந்து கொடுக்கப்பட்டு நகைகளை திருடிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வடமதுரை, குஜிலியம்பாறை போன்ற பகுதிகளில் தனிமையில் இருக்கும் மூதாட்டிகளிடம் திருட்டு தொடர்ந்து நடந்து வந்தது.

திருட்டு சம்பவத்தில் ஈடுப்படும் நபர்கள் முதலில் முதியவர்களிடம் அன்பாக பேசி, மயக்க மருந்து கலக்கப்பட்ட தின்பண்டங்களை கொடுத்து சாப்பிட வைத்திருக்கிறார்கள். மயக்கமடையச் செய்த பின்னர், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை திருடிச் செல்வதை இந்த ஜோடி வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட மூதாட்டிகளிடம் இந்த ஜோடி கைவரிசை காட்டி வந்துள்ளது. இந்நிலையில், வேடசந்தூர் அரசு மருத்துவமனை எதிரே இந்த ஜோடி, மூதாட்டி ஒருவரிடம் பேசி அவரை பைக்கில் அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து, திருட்டில் ஈடுப்பட்ட கணேசன் மற்றும் சுமதியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், விசாரணையில் இவர்கள் இருவரும் கள்ளக்காதலர்கள் என்பது தெரியவந்துள்ளது.  

நீங்க என்னை மகளா நினைச்சுக்கோங்க பாட்டி... முதியவர்களை டார்கெட் பண்ணி திருடி வந்த ஜோடி கைது! | Dindigul Robbery Couple Arrested