ஹோட்டலுக்குள் வந்த பாம்பு - அலறி அடித்து ஓடிய மக்கள்!
பழனியில் உள்ள தனியார் உணவகத்தில் பாம்பு புகுந்ததால் சாப்பிட வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியின் இடும்பன் குளம் எதிரே தனியார் உணவகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்திற்குள் இன்று காலை 7 அடி நீள சாரை பாம்பு புகுந்துள்ளது.
இதனை கண்ட வாடிக்கையாளர்கள், சாப்பிடுவதை விட்டுவிட்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து கடை உரிமையாளர் பாம்பு பிடிப்பவருக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாம்பு பிடிக்கும் முகேஷ், சுமார் ஒரு மணி நேரமாக போராடி அந்த 7 அடி நீள பாம்பை பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பாம்பை வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.