ஆ.ராசா, லியோனியை கண்டித்த மோடி.. பொங்கி எழுந்த காங்கிரஸ் எம்.பி!

modi bjp congress dindigul leoni
By Jon Mar 30, 2021 04:01 PM GMT
Report

தாராபுரத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுவதால் அதற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொள்ள தாராபுரம் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு வந்தார் பிரதமர் மோடி. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எல்.முருகன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர், முதல்வரின் தாயை இழிவாக பேசிய ஆர்.ராசாவையும், பெண்களின் இடுப்பை பற்றி கேவலமாக பேசிய திண்டுக்கல் லியோனியையும் கண்டங்களை தெரிவித்து பேசினார். பெண்களை இழிவுபடுத்துவதே திமுக – காங். கலாச்சாரம். எதிரணியை அவமானப்படுத்துவது, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் வேலையில் திமுக இறங்கி இருக்கிறது என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வேலையை தற்போது எதிரணியினர் ஏவியுள்ளனர் என்றும், முதல்வர் பழனிச்சாமியின் தாயார் பற்றி திமுக அவமதித்தது கண்டிக்கத்தக்கது.

பெண்கள் குறித்து திண்டுக்கல் லியோனியும் கீழ்த்தரமாக விமர்த்துள்ளார். திமுக – காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இன்னும் எப்படி எல்லாம் பெண்களை இழிவுபடுத்துவார்கள்?’’என்று பேசினார்.

இது குறித்து கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது சமூகவலைத்தளத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘பொள்ளாச்சியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களின் கதறல் இப்போது நினைத்தாலும் நெஞ்சை உறையவைக்கிறது.

அதில் தொடர்புடைய அதிமுக தலைவர்களை காப்பாற்றும் எடப்பாடி பழனிசாமியும், நரேந்திர மோடியும் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசுவதற்கு வெட்கப்படவேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.