திண்டுக்கல்லில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்..! பொதுமக்கள் அச்சம்..!
dindigul
black fungus
3 member affect
By Anupriyamkumaresan
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிதாக உருவெடுத்துள்ள கருப்பு பூஞ்சை நோய் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களேயே அதிகளவு இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. நோய் தொற்று கண்டறியப்பட்ட மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.