T20 உலகக் கோப்பை - இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்கா விலகல்..! - ரசிகர்கள் ஷாக்
T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியிலிருந்து வீரர் தில்ஷான் மதுஷங்கா விலகியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நேற்று முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.
தில்ஷான் மதுஷங்கா விலகல்
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையிலிருந்து காயம் காரணமாக இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்கா விலகி இருக்கிறார்.
அவருக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டோ உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இதுவரை 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பினுரா பெர்னாண்டோ, இந்தாண்டு பிப்ரவரி மாதம் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியிலிருந்து வீரர் தில்ஷான் மதுஷங்கா விலகியுள்ளது, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.