''பேச்சில் கண்ணியம் முக்கியம் '' - தொண்டர்களுக்கு உத்தரவு போட்ட ஸ்டாலின்

dmk stalin volunteers dignity
By Jon Mar 27, 2021 12:47 PM GMT
Report

திமுகவினர் தேர்தல் பிரசாரத்தின்போது கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக்கக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில் அன்புடைய திமுக உறுப்பினர்களுக்கு, மக்களிடையே பரப்புரை செய்யும்போது நமது கட்சி மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பரப்புரையில் ஈடுபடும் போது உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும், அத்தகைய பேச்சுகளைக் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என தெரிவித்துள்ள ஸ்டாலின், திமுகவினரின் பேச்சுகளைத் திரித்து,தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.