டிஜிட்டல் முறையில் “போன் பே” மூலம் பிச்சை - வைரலாகும் நபர்
பீகாரில் பிச்சைக்காரர் ஒருவர் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுத்துள்ள சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சம்பரன் மாவட்டத்தில் ராஜூ படேல் என்ற நபர் கடந்த பல ஆண்டுகளாக அந்த பகுதியில் பிச்சை எடுத்து வருகிறார். டிஜிட்டல் உலகில் தற்போது யாரிடமும் கையில் பணம் வைத்திருப்பதில்லை. அனைத்து பொருட்களுக்கும் செல்போன் மூலம் தான் பண பரிவர்த்தனை செய்து வருகிறார்கள்.
இதனையடுத்து, தனக்கென ஒரு க்யூஆர் கோட் அடங்கிய அட்டையை தயார் செய்து அதை கழுத்தில் அணிந்து கொண்டு பிச்சை எடுத்து வருகிறார் ராஜூ. இவரது செயல் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தற்போது இவருக்கு செல்போன் மூலம் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பலர் பணத்தை பிச்சை போட்டு வருகிறார்கள்.
பிச்சைக்காரனான இவரும் தன்னுடைய பிச்சைக்கார தொழிலுக்கு டிஜிட்டல் முறையில் க்யூஆர் கோட் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

