கோவை சரக டிஐஜி தற்கொலை வழக்கு - வெளியான (FIR) முதல் தகவல் அறிக்கை!

Tamil nadu Tamil Nadu Police
By Vinothini Jul 08, 2023 04:28 AM GMT
Report

டிஐஜி விஜயகுமார் தற்கொலை வழக்கு குறித்து முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதிகாரி விஜயகுமார்

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார். இவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக காவலர் பணியை தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் 2009-ல் யுபிஎஸ்சி தேர்வு தமிழில் எழுதி ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.

dig-vijayakumar-suicide-fir-report

காஞ்சிபுரம், கடலூர் ,நாகை, திருவாரூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். சென்னை காவல் துணை ஆணையராக பதவி வகித்தார், பின்னர் கோவை சரக டிஐஜியாக பொறுப்பேற்றார். தற்பொழுது இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார், இவர் மெய் பாதுகாவலர் ரவி என்பவரிடம் துப்பாக்கியை வாங்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவர் மன அழுத்தத்தில் இருந்ததுதான் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

முதல் தகவல் அறிக்கை

இந்நிலையில், இவர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியானது. அதில் "ஜனவரி மாதத்தில் இருந்தே, சரியான தூக்கம் வரவில்லை என தூக்க மாத்திரை எடுத்துக்கொள்வார் நேற்று காலை என்னுடைய துப்பாக்கியை எடுத்து எப்படி பயன்படுத்துவது என என்னிடம் கேட்டார்.

dig-vijayakumar-suicide-fir-report

அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கி சத்தம் கேட்டதையடுத்து ஓடி வந்து பார்த்தபோது டிஐஜி தலையில் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார் எந்த காரணத்திற்காக டிஐஜி உயிரை மாய்த்து கொண்டார் என தெரியவில்லை" என்று டிஐஜி பாதுகாவலர் ரவிச்சந்திரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 174 சட்டப்பிரிவின் படி குற்றமாக வழக்குப்பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
https://ibctamilnadu.com/article/dig-vijayakumar-committed-suicide-1688697680