21 குண்டுகள் முழங்க டிஐஜி விஜயகுமார் உடல் தகனம்..!
தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடல் 21 குண்டுகள் முழங்க காவல்த்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
டிஐஜி விஜயகுமார் தற்கொலை
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 .50 மணிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை 6 மணிக்கு வழக்கம் போல் நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி தன் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் இன்றி ஒட்டுமொத்த காவல்துறையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் அவரின் உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உடற்கூறாய்வு முடிந்து அவரின் சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அவரின் உடலுக்கு பொதுமக்கள் காவல் துறையினர் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனம்
இந்நிலையில் அவரின் உடலை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவல்த்துறையினர் சுமந்து சென்று தேனி அல்லிநகரம் பகுதியிலுள்ள நகராட்சி எரிவாயு தகன மேடையில் 21 குண்டுகள் முழங்க காவல்த்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.