அன்றைய தலிபான்களுக்கும், இன்றைய தலிபான்களுக்கும் வித்தியாசம் இருக்கு :தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபிஹூல்லா முஜாஹித்!

Afghanistan Talibans
By Irumporai Aug 17, 2021 05:02 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படாது என்று தலிபான் தெரிவித்துள்ளது.

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் தாலிபான்கள். தலிபான்களை பொருத்தமட்டில் மத அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாத சித்தாந்தங்களில் நம்பிக்கை உடையவர்கள் என்று சர்வதேச சமூகத்தால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள்.

குறிப்பாக பெண்களுக்கு கல்வி வழங்குவதை விரும்பாதவர்கள் என பேசப்பட்டதால் தாலிபன்கள் ஆதரவிற்கு ஐ.நா உட்பட பல நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இன்று காபூலை சேர்ந்த 4 பெண்கள் தங்கள் அலுவலகத்திற்கு வெளியே தாங்கள் உரிமைக்காக வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அடையாளங்களுடன் போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் பேசு பொருளான நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த தலிபான் செய்தித்தொடர்பாளர் ஸபிஹுல்லா :இஸ்லாம் அடிப்படையில் பெண்களுக்கான உரிமைகள் வழங்க தலிபான் உறுதிபூண்டுள்ளது. சுகாதாரத் துறை மற்றும் தேவையான பிற துறைகளில் பெண்கள் பணிபுரியலாம். பெண்கள் மீது பாகுபாடு இருக்காது என கூறினார்.

மேலும், காபூலிலுள்ள தூதரங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அனைத்துத் தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பை எங்களது அனைத்துப் படைகளும் உறுதிப்படுத்தும் என்பதை சர்வதேச நாடுகளுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய அரசை அமைக்க விரும்புகிறோம் என அவர் கூறியுள்ளார். 

அப்போது 1990-களிலிருந்த தலிபான்களுக்கும், இன்றைய தலிபான்களுக்கும் இடையிலான வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், இஸ்லாம் என்பதால் சித்தாந்தங்களும், நம்பிக்கைகளும் அப்படியேதான் உள்ளது ஆனால், அனுபவத்தின் அடிப்படையில் மாற்றம் இருக்கிறது. இவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் வேறுபட்ட பார்வை இருப்பதாக கூறினார்.