78 வயதிலும் அமைச்சர் செங்கோட்டையன் இவ்வளவு ஃபிட்டாக இருப்பதன் காரணம் என்ன?
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் உணவு என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், காலையில் நாம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவானது நமக்கு அந்த நாள் முழுவதும் நம் உடலை நல்ல ஆரோக்கியமாகவும் செரிமான பிரச்சனை இன்றியும் வைத்துக் கொள்கிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு வயது 78 என்றாலும் அவர் இன்று வரை ஃபிட்டா இருப்பதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணம் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டையில் அவர் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதாக சொல்லி இருக்கிறார். இது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரிலும் திமுகவின் முன்னாள் அமைச்சரான கே.என் நேருவும் பேசி இருப்பார்.

இதனை தொடர்ந்து வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்ற தேடல் பலருக்கும் தொடங்கியுள்ளது. அதைப்பற்றி பார்ப்போம். நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள், பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
மேலும், நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி ஆக்ஸிடென்ட் உடல் நலத்திற்கு நன்மை வழங்கும் என்று பல ஆய்வுகள் தெரிவித்து இருக்கிறது. இருந்தாலும் குறிப்பிட்ட சில நூல்களுக்கு இதனை நாம் சிகிச்சையாக கருதக்கூடாது.

1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
நெல்லிக்காயில் அதிக அளவில் இருக்க கூடய வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், உடலை பல்வேறு நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாத்து நம்மை வெளிப்புற கிருமி தாக்குதல்களை எதிர்க்கவும் உதவுகிறது. ஒருவர் தொடர்ச்சியாக நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வருவது அடிக்கடி அவர்களுக்கு ஏற்படும் சளி காய்ச்சல் போன்ற பாதிப்புகளின் வீரிய தாக்குதலை குறைக்கிறது.
2. செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கும்:
ஒருவர் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது என்பது அவர்களுக்கு வயிற்றில் செரிமான நொதிகள் மற்றும் சார்களின் சுரப்பை தூண்டி உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவியாக அமைகிறது. அஜீரணம் மற்றும் உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகள் குறையவும் அவை நமக்கு உதவியாக இருக்கிறது.
3. சரும ஆரோக்கியத்தை காக்கும்:
நெல்லிக்காயில் இருக்கக்கூடிய வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உடலில் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது.
சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை அவை பாதுகாத்து நமக்கு சுருக்கம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுவதையும் தாமதப்படுத்துவதற்கு உதவுகிறது. அதோடு, சருமத்திற்கு இயற்கையான பொழிவையும் ஆரோக்கியமான தோற்றத்தையும் அவை வழங்குகிறது.

4. தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லது:
நெல்லிக்காயில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் வேர்களில் மிகவும் ஆழமாக சென்று நம்முடைய முடியை வலுப்படுத்துகின்றன.
அவை நம்முடைய வேர்களில் ஆரோக்கியத்தை பாதுகாத்து முடி உதிர்வை தடுக்கிறது. அதைவிட, நம்முடைய தலைமுடி நரைப்பதை தாமதப்படுத்தி இயற்கையான கருமையாக இருக்க உதவுகிறது.
5. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:
நெல்லிக்காயில் உள்ள பயோ ஆக்டிவ் கலவைகள் உடலில் இருக்கக்கூடிய இன்சுலின் உற்பத்தியும் அதனுடைய செயல்பாட்டையும் ஆதரிக்க உதவுகின்றன.
இதனால் நம்முடைய ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் திடீர் என உயர்வை தவிர்க்கவும் உதவியாக அமைகிறது. நீரழிவு நோய் உள்ளவர்கள் நிச்சயம் நெல்லிக்காய் எடுப்பதற்கு முன்பாக மருத்துவரை ஆலோசிப்பது நன்மையை வழங்கும்.
6. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்:
நெல்லிக்காயில் இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படக்கூடிய ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. இது நம்முடைய ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைக்கிறது. இது நம்முடைய ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாத அபாயத்தை குறைக்கிறது.

7. உடல் எடை மேலாண்மைக்கு உதவும்:
நெல்லிக்காய் ஜூஸில் கலோரிகள் மிகக் குறைவாகவும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் இவை நம்முடைய உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி கொழுப்பை எரிக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது.
ஆதலால், உடல் எடை குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இவை ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் தரும் பானமாக விளங்கும்.
நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
நெல்லிக்காய் பல ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அதனை பயன்படுத்தும் போது நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதாவது, அதிக அமிலத்தன்மை அல்லது வயிற்றுப்புண் பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் ஜூஸை அளவோடு எடுத்துக் கொள்வதே நல்லது. அளவுக்கு அதிகமாக குடிப்பது சிலருக்கு வயிற்று எரிச்சல் அல்லது செரிமான கோளாறுகள் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தப்படும்.
மேலும், நெல்லிக்காய் ஜூஸில் சர்க்கரை அல்லது செயற்கை இனிப்பு சேர்ப்பதை தவிர்த்து இயற்கையான முறையில் நாம் பருகுவதை நமக்கு முழுமையான ஆரோக்கியத்தை வழங்கும். யாருக்காவது தீவிர உடல் நலப் பிரச்சினைகள் இருந்தால் தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்பவராக இருந்தால் வழக்கமான உணவில் சேர்ப்பதற்கு முன்பாக மருத்துவரை அணுக வேண்டும்.