சென்னையில் 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு : சோகத்தில் வாகன ஓட்டிகள்
சென்னையில் உள்ள பல்வேறு பெட்ரோல் பங்க்குகளில் இரண்டாவது நாளாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
உயரும் டீசல் விலை
சென்னையில் உள்ள சில பங்க்குகளில் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச அளவில் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
அந்தவகையில், சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னையில் உள்ள ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த பெட்ரோல் பங்க்குகளில் 'டீசல் இல்லை' என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
அதிர்ச்சியடையும் வாடிக்கையாளர்கள்
டீசல் போடுவதற்காக பெட்ரோல் பங்க்குகளுக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு 'டீசல் இல்லை' என்ற அறிவிப்பு பலகையை பார்த்து அதிர்ச்சி அடைவதுடன், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பெட்ரோல் முகவர்கள் சங்கத்தைச் சேர்ந்த முரளி அளித்த பேட்டியில், டீலர்களுக்கு தேவையான டீசல் விநியோகத்தை ஆயில் கம்பெனிகள் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.
எதனால் டீசல் விநியோகம் செய்யவில்லை என்ற காரணத்தையும் இதுவரை கூறவில்லை என்றார். முறையான டீசல் விநியோத்தை ஆயில் கம்பெனிகள் செய்யாததால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.