டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்பு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
மொத்தமாக கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கான டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா–உக்ரைன் இடையே கடந்த 25 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 40% அதிகரித்துள்ளது.
இதனால் இந்தியாவில் மொத்தமாக டீசல் வாங்கும் நிறுவனங்களுக்கு அதன் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெட்டோல் நிலையங்களில் டீசல் நிரப்பிக்கொள்ளும் சில்லறை வாடிக்கையாளருக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வால் போக்குவரத்துக் கழகங்கள், நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக . தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தினமும் 15 லட்சம் லிட்டர் வரை டீசல் கொள்முதல் செய்து வருகிறது.
அதேபோல் சில நிறுவனங்கள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மொத்தமாக டீசல் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக பெட்ரோல் நிலையங்களில் சென்று வாங்கி வருவதால் அங்கு விற்பனை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்நிலையில் ஜியோ – பிபி, ஷெல்,நயரா எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய பெட்ரோல் நிலையங்களை மூட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.