கூட்டணி குறித்து பேசிய அமித்ஷா; பேட்டியை நான் பார்க்கவில்லை - எடப்பாடி பழனிசாமி அதிரடி!
கூட்டணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
கூட்டணி
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதற்கிடையில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அறிவித்தது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டி ஒன்றில், அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று தெரிவித்தார்.
பார்க்கவில்லை
இந்நிலையில் இன்று சேலத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி "நான் இன்னும் அதை பார்க்கவில்லை, பார்த்ததும் சொல்கிறேன்" என்று கூறினார்.