இந்தியா தப்பிச் சென்றதா மகிந்த ராஜபக்சே குடும்பம்? - மறுப்பு தெரிவித்த இந்திய துாதரகம்..!

Mahinda Rajapaksa SL Protest India
By Thahir May 10, 2022 09:45 PM GMT
Report

பொருளாதார நெருக்கடிக்கு காரணமான பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி இலங்கையில் ஒரு மாத காலமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே. அப்போது மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.

இதையடுத்து போராட்டக்காரர்கள் மகிந்த ராஜபக்சே வீட்டிற்கு தீ வைத்தனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார். இந்நிலையில் மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியா தப்பிச்சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது.

இந்நிலையில், இது முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. இதை நம்ப வேண்டாம் என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.