5 பேர் உயிரிழப்பு...தீர்த்தவாரி நிகழ்ச்சி குறித்து அறநிலையத்துறைக்கு தெரிவிக்கவில்லை - அமைச்சர் சேகர்பாபு
சென்னை அருகே மூவரசம்பட்டியில் உள்ள குளம் ஒன்றில் நேற்று 5 அர்ச்சகர்கள் குளத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
5 பேர் உயிரிழப்பு - அமைச்சர் விளக்கம்
இது குறித்து சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு விளக்கம் அளித்து பேசினார் அமைச்சர் சேகர் பாபு,
சென்னை அடுத்த மூவரசம்பட்டியில் உள்ள குளம் பஞ்சாயத்து நிர்வாகிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்றும் கடந்த நான்கு ஆண்டுகளாக தான் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்று வருகிறது.
இந்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுவது குறித்து அறநிலையத்துறைக்கு தெரிவிக்கவில்லை என்றும், 5 பேர் நீரில் மூழ்கி இறந்த குளம் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ளது.
வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படும்
இனிமேல் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் போது கோவில் நிர்வாகங்கள் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றார்.