சோனியா புத்தக வெளியீட்டு விழா - ராகுலின் அழைப்பை ஏற்க மறுத்த ஸ்டாலின்
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்குமாறு ராகுல் காந்தி விடுத்த அழைப்பை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் ஏற்க மறுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராகுலுடன் பேச மறுத்த ஸ்டாலின்
சோனியா காந்தியின் Belonging: A Journey of Love என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்குமாறு மு.க. ஸ்டாலினைத் தொலைபேசியில் அழைக்க ராகுல் காந்தி விரும்பியதாகவும், இதற்காக ராகுல் காந்தியின் அலுவலகத்திலிருந்து ஸ்டாலினின் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவரம் ஸ்டாலினின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டபோது, தான் முக்கியப் பணிகளில் இருப்பதாகக் கூறி ராகுல் காந்தியுடன் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்த்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் திமுக – காங்கிரஸ் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

முன்னதாக, சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக திமுக தரப்பில் ஐந்து முறை அழைப்பு விடுக்கப்பட்டும், ராகுல் காந்தி அதனை ஏற்கவில்லை என்று திமுக மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
மேலும், காங்கிரஸுடனான நீண்டகால அரசியல் உறவை ராகுல் காந்தி கசப்பான நிலைக்குக் கொண்டுசென்றுவிட்டதாகவும் திமுக மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெற்றிபெற மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா IBC Tamil
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் இல்லக் காணி மதிலில் காட்சிபடுத்தப்பட்ட பதாகை கிழித்தெறிப்பு IBC Tamil
தன் மகளைப் பாதுகாக்க முடியவில்லை: அத்துமீறலுக்கு உள்ளான அனுராதபுரம் பெண் வைத்தியரின் தந்தை கண்ணீர் மல்க சாட்சி IBC Tamil