இன்னொரு புதிய சார்லி சாப்ளின் தேவை - கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு
ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை தெரியப்படுத்த புதிய சார்லி சாப்ளின் தேவை. சினிமா எப்போதும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
பிரான்சில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் உக்ரைன் அதிபர் விளாடிமர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினார். பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகாில் 75 வது திரைப்பட விழா தொடங்கியது.
இந்த விழாவில் இந்தியா சாா்பில் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திாி அனுராக் தாக்கூா் தலைமையில் இந்திய பிரபலங்கள் பங்கேற்றுள்ளனா். இந்த விழாவின் நடுவா் குழுவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம் பெற்றுள்ளாா்.
கமல்ஹாசன், இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான், நடிகா் மாதவன், இயக்குநா்கள் பாா்த்திபன், பா.ரஞ்சித், நடிகைகள் நயன்தாரா, தமன்னா உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனா். இந்த விழாவில் பங்கேற்ற இந்திய பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்று அளிக்கப்பட்டது.
வருகிற 28-ந் தேதி வரை இந்த விழா நடைபெற உள்ளது. இந்தாண்டிற்கான கவுரவத்திற்குாிய நாடாக இந்தியா தேர்வு செய்யப்பட்டது. இதன் தொடக்க விழாவில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி காணொளி மூலம் உரையாற்றினார்.
அதில் அவா் கூறியதாவது, ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த தற்போது புதிய சார்லி சாப்ளின் தேவை. சினிமா எப்போதும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும். இன்றும் சினிமா ஊமையாக இல்லை என்பதை நிரூபிக்க புதிய சாப்ளின் தேவை என்றாா்.
ஜெலென்ஸ்கியின் இந்த பேச்சுக்கு பலத்த கரவொலி எழுப்பினா். கடந்த 1940-ம் ஆண்டில் வெளியான தி கிரேட் டிக்டேட்டர் என்ற திரைப்படத்தில் ஹிட்லர் குறித்து சார்லி சாப்ளினின் பேசும் வசனத்தை மேற்கோள் காட்டி பேசினாா்.
இந்த திரைப்பட விழாவில்,"மரியூபோலிஸ் 2" என்ற ஆவணப்படம் சிறப்புத் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.