சுகர் இருக்குறவங்க தினமும் முட்டை சாப்பிடலாமா? என்னவாகும் தெரியுமா!
நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை நல்லதா, கெட்டதா? என தெரிந்துக்கொள்வோம்.
நீரிழிவு நோய்
முட்டையில் புரதச் சத்தும், ஊட்டச்சத்துக்களும் நிறைவாக உள்ளது. உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால், மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகம் என்பதால் அதனை ஒதுக்கி விடுகின்றனர். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் முட்டையை தினசரி சாப்பிடலாம என்ற கேள்வி பலர் மத்தியில் உள்ளது. எப்போதாவது ஒரு முட்டை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
முட்டை நல்லதா?
ஆனால், தினசரி முட்டை சாப்பிடக் கூடாது என்று சில ஆய்வுகள் கூறுகிறது. அதன்படி அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுகின்ற நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையின் அளவு 39 சதவீதம் வரையில் அதிகரிக்கிறது.
சர்க்கரை நோய் அல்லாதவர்களுக்கும் கூட தினசரி முட்டை சாப்பிடுவதால் அந்த நோய்க்கான அபாயம் அதிகரிக்கும். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத்தான் அபாயம் அதிகம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சில சமயம், மலக் கழிவுகளுடன் கோழிகள் தொடர்பில் இருப்பதால், சல்மோனெல்லா என்ற பாக்டீரியா பரவுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என ஆய்வுகள் எச்சரிக்கிறது.