நீரிழிவு நோயாளியா நீங்க அப்போ இந்த மீனை சாப்பிடுங்க!

Food Diabetes Fish
By Thahir Jul 26, 2021 03:09 PM GMT
Thahir

Thahir

in உணவு
Report

நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் அளவை நிர்வகிப்பதிலும் இன்சுலின் எதிர்ப்பை தடுப்பதிலும் மற்றும் இதய நோய்கள் போன்ற நீரிழிவு காரணமாக ஏற்படும் சிக்கல்களை குறைப்பதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்கி மீன் நன்மை பயக்கிறது.

நீரிழிவு நோயாளியா நீங்க அப்போ இந்த மீனை சாப்பிடுங்க! | Diabetes Patients Food Fish

மீன் ஒரு ஆரோக்கியமான உணவாகும். குழந்தைகளில் துவங்கி பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய உணவாக மீன் உள்ளது. ஆனால் மீன் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறதா என்பது பலரது கேள்வியாக உள்ளது. ஒரு ஆய்வின்படி அதிக அளவு மீன் உட்கொள்வது நீரிழிவு நோயின் வளர்ச்சியை குறைக்காது. ஆனால் உடல் பருமன் அதிகமாக உள்ள நபர்களில் இது நீரிழிவிற்கான ஆபத்தை குறைக்கிறது என கூறப்பட்டுள்ளது.

சால்மன் மற்றும் ஹெர்ரிங் போன்ற கொழுப்பு மீன்களை உட்கொள்வது உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க உதவுகிறது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. வைட்டமின் டி ஆனது மீன்களில் ஒரு முக்கியமான வைட்டமின் ஆகும். இது நீரிழிவு நோய்க்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் இது உதவுகிறது. இதனால் கொழுப்பு மீன்கள் கண்டிப்பாக நீரிழிவு ஆபத்தை குறைக்கவே உதவுகின்றன.

மீன் புரதங்களுக்கான நல்ல மூலமாகும். ஒரு ஆய்வின்படி மஸ்டெலஸ் அண்டார்டிகஸ் போன்ற மீன்களில் தனித்துவமான உயர்தர புரதங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சியுடன் ஒப்பிடும்போது பெரிய அளவிலான மன நிறைவை வழங்குகின்றன. மேலும் டுனா போன்ற மீன்கள் வான்கோழி மற்றும் முட்டையுடன் ஒப்பிடும்போது சிறந்த ஊட்டச்சத்துக்களை கொண்டவையாக உள்ளன. இவை இன்சுலின் சுரப்பை மேம்படுத்த உதவலாம். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு புரதம் மற்றும் இன்சுலின் சுரப்பை மேம்படுத்த இது உதவுகிறது.

மீன்களில் ஏராளமான அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுவது மட்டுமின்றி பல விதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஒமேகா 3 நீரிழிவு நோய்க்கு முதன்மை காரணியாக கருதப்படும் அழற்சி சார்பு சைட்டோகைன்களை குறைக்க உதவுகிறது. இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்தானது கொழுப்பின் அளவை சீராக்க உதவுகிறது. இதனால் நீரிழிவு காரணமாக ஏற்படும் இதய பிரச்சனைகளையும் இது தடுக்கிறது.

நீரிழிவு நோய் வளர்ச்சியில் உடல் பருமன் முக்கிய காரணமாக உள்ளது. உடலில் அதிக குளுக்கோஸ் காரணமாக கொழுப்புகள் அதிகரிக்கின்றன. இதனால் இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டு இறுதியில் நீரிழிவு ஏற்படுகிறது. திலாபியா, கோட், சோல் போன்ற சில மீன்களில் கலோரிகள் குறைவாகவும் புரதங்கள் அதிகமாகவும் இருக்கின்றன. மேலும் இதை உணவில் சேர்க்கும்போது நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் இது உதவுகிறது.

மீன்களில் முக்கிய அங்கமாக நார்ச்சத்து உள்ளது. இது உடலில் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதனால் இது பிளாஸ்மா லிப்பிட் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோஸை நிர்வகிக்க இது உதவுகிறது. செரிமான மண்டலத்திற்கு இது நன்மை பயக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் வாரம் இருமுறை மீன் சாப்பிடலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஒரு வேளைக்கு சுமார் 140 கிராம் சமைத்த மீனை எடுத்துக்கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் உண்ண வேண்டிய மீன்கள்

ஜிலேபி கெண்டை

ட்ரவுட் மீன்

டுனா சால்மன்

மத்தி

நீரிழிவு நோயாளியா நீங்க அப்போ இந்த மீனை சாப்பிடுங்க! | Diabetes Patients Food Fish

கானாங்கெளுத்தி