சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும் - ஏன் தெரியுமா?

Fruits Diabetes Control நீரிழிவுநோய் உடல்ஆரோக்கியம் சர்க்கரைநோய் பழங்கள் மருத்துவம் SugarPatients
By Thahir Apr 01, 2022 11:52 PM GMT
Report

உலக மக்கள் பெரும்பாலனோர் சந்திக்க கூடிய முக்கிய பிரச்சனைகளில் ஒன்று நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்).

நீரிழிவு நோயால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீரிழிவு நோயாளிகள் தங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள பழங்கள் சாப்பிடுவது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் மாம்பழம்,முலாம்பழம்,திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் மருத்துவரின் ஆலோசனையின் பின்பே பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். 

குறைந்த சர்க்கரை அளவுள்ள 5 பழங்கள்

கொய்யா  

கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.இது இரத்த சரக்கரையை அதிகரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.அஜீரணக் கோளாறுகளை தடுக்கிறது.

பீச் பழம்

100 கிராம் பீச் பழத்தில் 1.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. ஃபைபர் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடுவதை உறுதி செய்கிறது.

கிவி பழம் 

கசப்பான மற்றும் சுவையான கிவி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் இது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயத்தை தடுக்கிறது.

ஆப்பிள்

ஆப்பிள் பழம் நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.மேலும் இந்த பழம் இரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு, திராட்சைப்பழம் மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது ஆரோக்கியமான நீரிழிவு உணவுத் திட்டத்திற்கு பயனளிக்கும்.