சர்க்கரை நோயாளியா நீங்கள்? அப்போ இந்த கீரையை சாப்பிடுங்க..!

Healthy Food Recipes
By Thahir May 07, 2022 05:27 PM GMT
Report

இயற்கை காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளாக கீரைகள் உள்ளன. விலை மலிவான இவை உடலுக்கு ஊட்டச்சத்துக்கள், சுவை என ஒட்டுமொத்த ஆரோக்கிய நலன்களையும் கொடுக்க வல்லதாக இருக்கிறது.

பொதுவாக கீரைகளில் அதிக போலிக் அமிலம் காணப்படுகிறது. இது நம்முடைய நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கவும், உணவில் புரதச்சத்தை கூட்டி உடல் வளர்ச்சி அடையவும் உதவுகிறது.

கீரைகளில் பல வகைகள் உள்ளன. அதில் பாலக் கீரை குறிப்பிடும்படியான ஒன்றாக உள்ளது. இவற்றுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த அற்புத கீரை மிகவும் சிறந்தது. ஏனெனில், இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இவை உதவுகிறது.

புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியதாகவும் பாலக் கீரை உள்ளது. இது ரத்த சிவப்பு அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்வதால் இது அனிமீயா நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதிகளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது. பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் பால் அதிகம் சுரக்கும். இந்த அற்புத கீரையில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் – கே அதிகம் உள்ளது.

இவை எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன. பாலக் கீரையில் புரத சத்து நிரம்பி காணப்படுகிறது. எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

பாலக் கீரை கண் பார்வை நன்றாக தெரிய உதவுகின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும் பாலக் கீரை ரெசிபி:

பாலக் கீரை – ஒரு கட்டு

கோவக்கா – 10

தக்காளி – 2

சின்ன வெங்காயம் – 50

கிராம் சீரகம் – ஒரு ஸ்பூன்

மிளகுத் தூள் – தேவையான அளவு

நெய் – சிறிதளவு

செய்முறை:

இந்த ரெசிபியை தயார் செய்ய முதலில் பாலக் கீரையை நன்றாக அலசி சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பின்னர் கோவக்காய், சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் நறுக்கிக்கொள்ளவும். இப்போது இட்லி பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து வேக வைக்க தயார் செய்யவும்.

முதலில் முன்னர் பொடியாக நறுக்கிய பாலக் கீரை, கோவக்காய், சின்ன வெங்காயம், தக்காளியை அந்த இட்லி தட்டில் வைத்து, மூடியால் மூடி நீராவியில் வேக வைக்கவும்.

இதன்பிறகு ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் முன்னர் நீராவியில் வேகவைத்த பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும். பின்னர் மிளகுத் தூள், சீரகம் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.