சர்க்கரை நோயாளிகளா நீங்கள்? அப்போ இந்த உணவை தயவு செய்து சாப்பிடாதீர்கள்..!

Foods Avoid SugarPatient நீரிழிவுநோய் உடல்ஆரோக்கியம் சர்க்கரைநோய் DiabetesPatient உடல்நலம் உணவேமருந்து
By Thahir Mar 26, 2022 12:16 AM GMT
Report
125 Shares

சர்க்கரை நோயாளிகள் இன்றும் பலர் பரோட்டோ மற்றும் எண்ணெய் பொறித்த திண்பண்டங்களை சுவைத்து வருவது வாடிக்கையாகிவிட்டாது.

இது அவர்களின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று தெரிந்தும் சாப்பிட்டு வருவதை மருத்துவர்கள் கண்டிக்கின்றனர்.

சர்க்கரை நோயாளிகள் எந்த வகையான உணவுகளை உண்ண கூடாது என்பதை சற்று விரிவாக பின்வருமாறு பார்க்கலாம்.

மைதா

கோதுமையின் கழிவு தான் மைதா இதில் உடல் ஆரோக்கியத்திற்கான எந்த சத்துக்களும் இல்லை.

மைதாவை சர்க்கரை நோயாளிகள் அதிகமாக பயன்படுத்தினால் அவர்களின் உள் உறுப்புகள் அதிகமாக பாதிப்படைய வாய்ப்புக்கள் உண்டு.

எண்ணெயில் பொரித்த உணவுகள்

எண்ணெயில் பொரித்த உணவுகளை சர்க்கரை நோயாளிகள் முடிந்தவரை தவிர்ப்பது சிறந்தது. 

ஐஸ் கிரீம் மற்றும் சாக்லட்

சிறுவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் அதிக சர்க்கரை நிறைந்துள்ள ஐஸ் கிரீம் மற்றும் சொக்லட்டை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

டீ 

டீ உடலில் குளுகோஸின் அளவை வேகமாக அதிகரிக்க கூடியவை. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை குறைப்பது சிறந்தது. 

கிழங்கு வகைகள்

கிழங்கு வகைகளில் சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கு போன்ற கிழங்குகளை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய வேறு உணவுகள்

கரும்புச்சாறு, சர்க்கரை, பன்னீர் (பால் கட்டி), மாம்பழம், சீத்தாப்பழம், பலாப்பழம், வாழைப்பழம், குளுக்கோஸ், உலர்ந்த திராட்சை.

அளவோடு சாப்பிட வேண்டிய உணவுகள்

சோளம், அரிசி உணவுகள், ஓட்ஸ், கேழ்வரகு, கோதுமை, வேர்க்கடலை, பாதம் பருப்பு, முந்திரி பருப்பு.