நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய் குழம்பு செய்ய! செய்வது எப்படி?
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட மறுக்கும் ஓரு காய்கறி உண்டென்றால் அது பாகற்காய் தான். ஏனெனில பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மையை யாரும் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது.
பாகற்காய் தருகின்ற சத்துகளை பற்றி தெரிந்து கொண்டால் அதை வேண்டாமென்று சொல்ல மாட்டோம்.
பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 6
வெங்காயம் - 3
தக்காளி - 1 கப்
காய்ந்த மிளகாய் - 6
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- பாகற்காயை நீரில் நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு, பாகற்காயில் உள்ள விதைகளை நீக்கி, சிறிய சிறிய துண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- அதில் உப்பு சேர்த்து கிளறி பதினைந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும் பின்பு, அதில் சிறிது நீர் சேர்த்து கழுவி நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துவிட வேண்டும்.
- பிறகு ஒரு கடாயில் காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் மற்றும் எள் சேர்த்து மிதமான தீயில், பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும். பின்பு அதனை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்து பொடியாக்கிக்கொள்ள வேண்டும்.
- பின்னர், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாகற்காயை போட்டு ஐந்து நிமிடம் வறுத்த பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நான்கு நிமிடம் வதக்க வேண்டும்.
- பிறகு இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி சாறை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
- கடைசியாக அரைத்து வைத்திருக்கும் பொடி, நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம், புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான பாகற்காய் குழம்பு தயாராகி விடும்.