திருமணத்திற்கு முன்பு உறவு வைத்தால் என்ன ? : மனம் திறந்து பேசிய பிரபல நடிகை
திருமணத்திற்கு முன்பு ஆண் பெண் உடலுறவு வைத்துக்கொள்வது அவர்களது சொந்த விருப்பம் என இந்தி நடிகை தியா மிர்சா பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
ஆண் பெண் உறவு
பிரபல இந்தி நடிகை தியா மிர்சா தமிழ் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்தன் மூலமாக பிரபலமானவர். மேலும் டிவி மற்றும் இணையத் தொடர்களில் நடித்தன் மூலமாக பிரபலமான தியா கடந்த வருடம் பிப்ரவரியில் தொழிலதிபர் வைபவ் ரெக்கியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
தற்போது இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்துள்ள தியா திருமணம் மற்றும் ஒரு பெண்ணின் கர்ப்பம் குறித்து பேசியுள்ளார்.
திருமணத்திற்கு முன் உறவு
அதில் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்வது என்பது தவறான ஒன்றாக பார்க்கப்படுவதாக கூறியுள்ள தியா. ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்பு பாலியல் ரீதியாக உறவுவைத்துக்கொள்வது அவர்களின் விருப்பம் , இது குறித்து முடிவுகள் எடுக்க அவர்களுக்கு உரிமையுள்ளது எனக் கூறியுள்ளார்.
அதே சமயம் ,பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறிய தியா பெண்கள் கரு கலைப்புக்கூட செய்ய முடியாத சூழல் நிலவுவதாக அமெரிக்காவில் தற்போது அமலுக்கு வந்த கரு கலைப்பு சட்டத்தை மேற்க்கொள் காட்டி பேசியுள்ளார்.
தியா தற்போது அனுபவ சின்ஹா இயக்கத்தில் பீட் படத்திலும், ரத்னா பதக் ஷா, பாத்திமா சனா ஷேக் மற்றும் சஞ்சனா சங்கி ஆகியோர் நடித்த தக் தக் என்ற படத்திலும் நடித்து வருகிறார்