தன் மனைவி மற்றும் மகளுடன் புத்தாண்டை கொண்டாடிய தோனி - வைரலாகும் வீடியோ...!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தன் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவாவுடன் 2023ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்றார்.
புத்தாண்டை கொண்டாடிய தோனி
தன் மனைவி மற்றும் மகளுடன் 2023ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடிய முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தோனி மனைவி சாஷி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவில்,
தோனி, சாக்ஷி மற்றும் மகள்ஜிவா ஆகியோர் வானத்தில் பட்டாசு வெடிப்பதை மகிழ்ச்சியோடு கண்டுகளிக்கின்றனர். ஷிவாவை தோனி தனது கைகளில் வைத்திருக்கும் போது மகள் சிரித்து மகிழ்கிறாள்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த தோனி ரசிகர்கள் லைக்குகளை அள்ளி கொடுத்து, அன்பு, செழிப்பு, நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் வாழ்வின் அமைதியுடன் 2023 புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதுவரை இந்த வீடியோ 3 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.