“உங்களுக்கு அவ்வளவுதான் மரியாதை” - தொடர் தோல்வியால் கடுப்பான தோனி

 பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் அதுகுறித்து தனது அதிருப்தியை வீரர்களிடையே கேப்டன் தோனி காட்டமாக வெளிப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாய் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெற்ற பின் தொடர்ந்து 3வது தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த போட்டியில் சென்னை வீரர் டூபிளிசிஸ் தவிர மற்ற யாருமே சிறப்பாக விளையாடவில்லை. போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் தோனி, இந்த தோல்வி சென்னை அணியை மன ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து ஓய்வறையில் தோனி சக வீரர்களிடையே சற்று ஆக்ரோஷமாக பேசியிருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, சில சீனியர் வீரர்களிடம் தோனி தனது அதிருப்தியை கடுமையாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதேவேளையில், தோனி தனது பேட்டிங் திறன் குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும். மேலும் குறைகளை சென்னை அணி பிளே ஆஃப்க்குள் களையவில்லை எனில், இறுதிப் போட்டிக்கு கூட முன்னேற முடியாது என ரசிகர்கள் இப்போதே புலம்பி வருகின்றனர். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்