Friday, Jul 18, 2025

அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா? வர்ணனையாளரின் கேள்விக்கு தோனி கூறிய பதில் என்ன?

MS Dhoni Chennai Super Kings IPL 2022
By Irumporai 3 years ago
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் கேப்டனாக பதவியேற்றுள்ள தோனி,தான் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணியில்  தொடர்வாரா? என்பது குறித்து தோனி விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல் 15வது சீசன் தொடங்குவதற்கு முன் தோனி, கேப்டன் பதவியானது ஜடேஜாவுக்கு வந்தது. ஆனால், ஜடேஜா தலைமையில் நடந்த 8 போட்டிகளில் 6 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. இதனையடுத்து, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜடேஜா சனிக்கிழமை அறிவித்த நிலையில் மீண்டும் கேப்டன் பதவி மீண்டும் தோனிக்கு தேடி வந்தது.

இதனை தொடர்ந்து கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில கேப்டன் தோனியிடம், ஐபிஎல் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பட்டது.

அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா? வர்ணனையாளரின் கேள்விக்கு தோனி கூறிய பதில் என்ன? | Dhoni Talks About His Future Plan At Toss

அதற்கு நிச்சயமாக அடுத்த ஆண்டும் விளையாடுவேன். ஆனால இதே மஞ்சள் ஜெர்சியாக இல்லை வேறு மஞ்சள் ஜெர்சிக்காகவா என்று என்னால் சொல்ல முடியாது என தோனி கூறினார்.

அவரது இந்த பேட்டியின் மூலம் நிச்சயம் தோனி அடுத்தாண்டு விளையாடுவார் என்றே தெரிகிறது. அப்படி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் சென்னை அணியில் ஒரு முக்கிய பொறுப்பில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.