அடுத்த வருசம் ஐபிஎல் தொடர்ல எல்லாருக்கு இருக்கு பாருங்க...தோனி யாரை சொல்றார் தெரியுமா?
சென்னை அணியின் இளம் வீரர் ஒருவர் அடுத்த ஐபிஎல் தொடரில் கலக்குவார் என கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே குஜராத், லக்னோ, ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றை எட்டியுள்ள நிலையில் மீதமுள்ள ஒரு இடத்துக்கு டெல்லி, பெங்களூரு அணிகள் இடையே போட்டி நிலவி வருகிறது. இதில் இன்று நடைபெறும் டெல்லி - மும்பை ஆட்டத்தில் வெற்றியை பொறுத்து அந்த ஒரு அணி எது என்பது தெரிய வரும்.
இந்த சீசனில் நடப்பு சாம்பியன் சென்னை அணி 13 போட்டிகளில் ஆடி 4 வெற்றி, 10 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பெற்றுள்ளது. இதனிடையே நேற்று ராஜஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இப்போட்டிக்குப் பின் தொடர் தோல்விகள் குறித்து பேசிய தோனி அடுத்த தொடரில் இளம் பந்துவீச்சாளர்கள் தங்களது தவறுகளை திருத்தி கொண்டு சிறப்பாக செயல்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
குறிப்பாக முகேஷ் சவுத்ரி நிறைய விஷயங்களை தற்போது தான் கற்று வருகிறார். அதேசமயம் தன்னை முன்னேற்றி கொள்வதில் அதிக முயற்சி மேற்கொள்கிறார். அதேபோல் எங்கள் அணியின் மலிங்காவான பதிரானாவின் பந்துவீச்சை எதிர்கொள்வது எளிதான விஷயம் அல்ல என்றும், அவர் அடுத்த தொடரிலும் சென்னை அணிக்காகவே விளையாடுவார். மேலும் பதிரானா அந்த தொடரில் சிறப்பாக செயல்படுவார் என தோனி கூறியுள்ளார்.