தோனிக்கு அறுவை சிகிச்சை; என்ன நடந்தது - ரசிகர்கள் அதிர்ச்சி
தோனி முழங்கால் காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தோனி
16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நடைபெற்றது. களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
வெற்றியின் மூலம் தோனி தலைமையிலான சென்னை அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றது. ஐபிஎல் தொடரில் 250 போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார்.
அறுவை சிகிச்சை
அதில் 349 பவுண்டரிகளுடனும் 239 சிக்ஸர்களுடனும் மொத்தமாக 5,082 ரன்களைக் குவித்துள்ளார். இந்நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபெண் மருத்துவமனையில் சில சோதனைகளுக்காக தோனி அனுமதிக்கப்பட்டார்.
முழங்கால் காயத்திற்கு முழுமையாக சிகிச்சை எடுத்துக்கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.