அவனோட மனசு ரொம்ப சோர்ந்து போயிட்டு : ஜடேஜா ராஜினாமா குறித்து மெளனம் கலைத்த தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் கேப்டனாக பதவியேற்றுள்ள தோனி, ஜடேஜா கேப்டன் பதவியில் விலகியதற்கான காரணம் குறித்து தோனி கூறியுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் தொடங்குவதற்கு முன் தோனி, கேப்டன் பதவியானது ஜடேஜாவுக்கு வந்தது.
? Official announcement!
— Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2022
Read More: ?#WhistlePodu #Yellove ?? @msdhoni @imjadeja
ஆனால், ஜடேஜா தலைமையில் நடந்த 8 போட்டிகளில் 6 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது.
இதனையடுத்து, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜடேஜா சனிக்கிழமை அறிவித்த நிலையில் மீண்டும் கேப்டன் பதவி மீண்டும் தோனிக்கு தேடி வந்தது. இதனை தொடர்ந்து கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.
இதனால் தோனியை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஜடேஜா கேப்டன் பதவியிலிருந்து விலகியது குறித்து மனம் திறந்த தோனி :
கேப்டன்ஷிப் விவகாரம் பொறுத்தவரை, கடந்த ஆண்டே ஜடேஜாவுக்கு , அவர் தான் இந்த சீசனில் கேப்டனாக செயல்பட போகிறார் என்று தெரியும் முதல் 2 போட்டியில் ஜடேஜாவின் கேப்டன் பொறுப்பை நான் தான் கவனித்தேன்.
அதன் பிறகு ஜடேஜாவிடம் நீ தான் முடிவுகளை அணிக்காக எடுக்க வேண்டும் என்று கூறினேன். கேப்டனாக பொறுப்பேற்கும் போது பல விஷயங்களில் செயல்பட வேண்டும் என்று நான் கூறியிருந்தேன்.
ஆனால், தொடர் செல்ல செல்ல, கேப்டன்ஷியின்( அணி தலைவன் ) என்ற அழுத்தம் அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சை பாதிக்க செய்தது. அவரது மனதும் சோர்வடைந்தது. இதனால் தான் ஜடேஜா விலகினார் என்று தோனி கூறினார்.