''ஆமா அந்த விஷயம் எங்கள ரொம்ப பாதிச்சது இப்போதான் நிம்மதியா இருக்கு'' - தோனி ஓபன் டாக்
கடந்தமுறை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாதது கடினமாக இருந்தது என்று தோனி வெற்றிக்கு பிறகு உருக்கமாக தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். 2021ம் ஆண்டிற்கான இறுதிப்போட்டிக்கு யார் முதலில் செல்வது என்பதை தீர்மானிக்கும் குவாலிபயர் 1 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி 2 பந்துகள் மீதம் வைத்து சென்னையை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
போட்டி நிறைவு பெற்ற பிறகு எம்.எஸ்.தோனி அளித்த பேடடியில், இது ஒரு முக்கியமான இன்னிங்ஸ். அவர்கள் மிகப்பெரிய பவுண்டரிகளை நன்றாக அடித்தனர்.
இந்த தொடரில் நான் அதிகமாக எதையும் செய்யவில்லை.கடந்தமுறை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாதது கடினமாக இருந்தது.அந்த சம்பவம் எங்கள ரொம்ப பாதித்தது இப்போதான் நிம்மதியா இருப்பதாக தோனி தெரிவித்துள்ளார்.துணையாக இருந்த அனைவருக்கும் இதில் பங்குண்டு என தோனி தெரிவித்துள்ளார்.